SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 50 காசு உயர்வு

2018-11-10@ 04:37:09

மும்பை: ரூபாய் மதிப்பு நேற்று ஒரே நாளில் 50 காசு உயர்ந்து ₹72.50ஆக இருந்தது.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ரூபாய் மதிப்பு ₹73க்கு மேல் சரிந்தது இறக்குமதியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா  எண்ணெய் முதல் முறையாக பேரல் 70 டாலருக்குக்கு கீழ் சரிந்தது. அதோடு, அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தல் முடிவால் டாலர் மதிப்பு வலுவிழந்தது. ரூபாய் மதிப்பு அதிகரிக்க இதுவும் சாதகமான காரணியாக  அமைந்தது.  இதனால் நேறறு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 50 காசு உயர்ந்து நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு ₹73ஆக இருந்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும் ₹72.68ஆகவும், பின்னர் ₹72.45ஆகவும்  அதிகரித்தது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 50 காசு வலுப்பெற்று ₹72.50ஆக இருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்