SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவறான தகவல் பரப்பப்படுகிறது ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு 3.6 லட்சம் கோடி கேட்கவில்லை: பொருளாதார விவகார செயலாளர் திட்டவட்டம்

2018-11-10@ 04:36:14

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு ₹3.6 லட்சம் கோடி கேட்பதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு ஒரு போதும் பணம் கேட்கவில்லை என்று பொருளாதார விவகார செயலாளர்  சுபாஷ் சந்த்ர கார்க் விளக்கம் அளித்துள்ளார்.  மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும், வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியை மத்திய  அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பண வீக்கத்தை காரணம் காட்டி ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகித்த காலத்தில் இருந்தே இந்த பிரச்னை தொடர்ந்து கொண்டுதான்  உள்ளது.

 ரிசர்வ் வங்கியின் இந்த செயல்பாட்டால் தொழில் முதலீடுகள், விஸ்தரிப்புகள் இல்லாமல் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், வராக்கடன் விவகாரம், வங்கி மோசடிகளுக்கு ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு குறைவே  காரணம் எனவும் மத்திய அரசு குற்றம் சுமத்தி வருகிறது.  ரிசர்வ் வங்கியிடம் தற்போது ₹9.59 லட்சம் கோடி இருப்பு உள்ளது. இதில் ₹3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கண்டித்து  விமர்சனம் செய்தன. அதோடு, தொடர் மோதலின் விளைவாக கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளார் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.  இதுகுறித்து மத்திய பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் சந்த்ர கார்க் நேற்று ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் ₹3.6 லட்சம் கோடி கேட்கவே இல்லை. இது முற்றிலும்  யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்தான். மத்திய அரசின் நிலை நிலைமை சிறப்பானதாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதனத்தை வரையறை செய்வது தொடர்பாகத்தான் பேச்சு நடந்து வருகிறது.  வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில்  நிதி பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக குறைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 2013-14 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருந்தது.  2014-15 நிதியாண்டில் இருந்து இது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டு முடிவில் நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறைந்திருக்கும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்