SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பவில்லை 4 நாளில் 2,000 கோடி உற்பத்தி முடக்கம்

2018-11-10@ 04:34:55

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள தொழிற்கூடங்களில் தீபாவளியை முன்னிட்டு விடுமுறை எடுத்துள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால், 4 நாளில் ர₹2 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி  முடங்கியுள்ளது.
கோவையில் கிரைண்டர், பவுண்டரி, பம்ப்செட், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பொறியியல் உற்பத்தி நிறுவனங்களும்,நூற்பாலை, விசைத்தறி துணி, ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி தொழில்  நிறுவனங்களும், நார், கயறு, செங்கல் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்களும் தயாராகிறது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா மற்றும் வட  மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்களில் தினசரி ரூ.500 கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு  செல்வதற்காக கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை 4 நாள் விடுமுறை எடுத்தனர். இதனால் நேற்று முன்தினம் (8ம் தேதி) முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழிலாளர்கள்  பெரும்பாலானோர் தங்களது விடுப்பை மேலும் நீடித்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான குறுந்தொழிற்கூடங்களில் உற்பத்தி துவங்கவில்லை.

இது குறித்து கோவையிலுள்ள குறு, சிறு தொழில் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘பொதுவாக ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப ஒரு வாரம் முதல் 10  நாட்கள் வரை ஆகிறது. இதனால் உற்பத்தி முழு வீச்சில் நடைபெறாது.  அதே போல் இந்த ஆண்டும் தொழிலாளர்களின் கூடுதல் விடுமுறையால் 4 நாள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் கோடி உற்பத்தி முடங்கியுள்ளது.  வரும் 12ம் தேதி முதல் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கிறோம்.  
கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் வேலை வாய்ப்பு குறைவால், தீபாவளி மற்றும் பொங்கல் விடுமுறைக்கு செல்லும் தொழிலாளர்களில் 5 சதவீதம் பேர் மீண்டும் கோவைக்கு திரும்புவது குறைந்து வருகிறது.

இதனால்  திறன்மிகு தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. புதிதாக திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. நலிவடைந்துள்ள குறு, சிறு தொழில்கள் மீண்டும் சீரடைந்தால் மட்டுமே  தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாத நம்பிக்கை ஏற்படும்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்