SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கயானாவில் விமான விபத்து : 126 பேர் தப்பினர்

2018-11-10@ 01:49:54

ஜார்ஜ்டவுன்: கயானாவில் விமானம் புறப்பட்டபோது ஏற்பட்ட கோளாறால் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டின் தலைநகர் ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு போயிங் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. இதில், 2 குழந்தைகள் உள்பட 126 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்தை ஜார்ஜ்டவுன் விமான நிலையத்திற்கே திரும்ப உத்தரவிடப்பட்டது. அப்போது, தரையிறங்கி ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் ஓடியது. இதில், இன்ஜின் முற்றிலும் சேதம் அடைந்தது. அதனால், அதிர்ஷ்ட வசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் 6 பேர் மட்டுமே காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்