SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூகுள் ஊழியர்கள் போராட்டம் எதிரொலி : பாலியல் குற்றச்சாட்டு கொள்கையில் மாற்றம்

2018-11-10@ 01:49:06

சான் பிரான்சிஸ்கோ,: பாலியல் புகார் குறித்த கொள்கையில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.உலகின் பிரபல நிறுவனமான கூகுள், பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயர் அதிகாரிகளுக்கு கேடயமாக இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த குற்றச்சாட்டை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மறுத்தார். ஆனாலும், பாலியல் துன்புறுத்தல் புகாரை கையாள்வதில் கூகுள் கடைபிடித்து வரும் கொள்கையில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி, உலகம் முழுவதும் உள்ள அதன் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் ‘வாக்அவுட்’ என்ற போராட்டத்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பாலியல் புகார் கொள்கையில் தேவையான சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும். விசாரணையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும். புகார் தரும் நபர்களுக்கு போதுமான ஒத்துழைப்பும், பாதுகாப்பும் தரப்படும். ஆண்டுதோறும் விசாரணை அறிக்கை வெளியிடப்படும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்