SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

14 ஆண்டில் பாகிஸ்தான் மீது 409 முறை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்கா

2018-11-10@ 00:47:45

இஸ்லாமாபாத்: தனது நாட்டுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகள் எங்கு பதுங்கி இருந்தாலும், அவர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது வழக்கம். அதுபோல், கடந்த 2004ம் ஆண்டில் இருந்து  இதுவரை பாகிஸ்தானில் அது 409 முறை ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 2,714 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 728 பேர் காயமடைந்து உள்ளனர். பஜவுர், பன்னு, ஹங்கு, கைபர், குர்ராம், மொகமந்த், வடக்கு வசிரிஸ்தான், நுஸ்கி, ஒரக்சாய் பகுதிகளில்  இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியின்போதுதான் அதிகப்பட்சமாக 2008 முதல் 2012 வரை 336 தாக்குதல்கள் நடத்தி, 2,282 மக்கள் கொல்லப்பட்டனர். 658 பேர் காயமடைந்தனர். இதில், ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலும் அடங்கும். . கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்