SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-11-10@ 00:38:16

* ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசின் கயானா புராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது.

* உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு ஐபிஎல் டி20 தொடரில் ஓய்வளிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும், உலக கோப்பை தொடரும் அடுத்தடுத்து வர உள்ளதால், ஐபிஎல் தொடரை மார்ச் மாதம் தொடங்கி நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

* இந்தியா - பாகிஸ்தான் அணிகளிடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடப்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எசான் மணி வலியுறுத்தி உள்ளார்.

* பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் பிலிப் கோடின்யோ காயம் காரணமாக 2 முதல் 2 வார காலம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* லண்டனில் நடைபெற உள்ள ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) விலகியுள்ளார்.

* இந்திய டெஸ்ட் அணி தொடக்க வீரர் பிரித்வி ஷா நேற்று தனது 19வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். அவருக்கு சக வீரர்களும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

* ஆசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர் - சவுரவ் சவுதாரி இணை ஜூனியர் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. பைனலில் சீனாவின் வாங் - ஹாங் இணையுடன் மோதிய மானு - சவுரவ் 485.4 - 477.9 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nba

  டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்