SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடியை கொள்ளையர்கள் செலவு செய்ததாக சிபிசிஐடி தகவல்

2018-11-09@ 17:09:05

சென்னை: சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடியை செலவு செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016ம் ஆண்டு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணத்தில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் 2 ஆண்டுக்கு பிறகு மத்தியபிரதேசத்தை சேர்ந்த மோஹர்சிங் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களை 14 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளையில் தொடர்புடையவர்கள் மேலும் சிலர் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் அந்தந்த இடங்களில் முகாமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் 7 பேரிடம் சிபிசிஐடி போலீசார் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அவற்றை தங்கமாகவோ, சொத்துகளாக வாங்கியுள்ளனர்களாக என சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்