SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகனத்தில் செல்வோர் சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

2018-11-09@ 14:50:39

சென்னை: வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து பொறுப்புடன் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயமக்கக் கோரி கொரட்டூர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெல்மெட் அணிவது அதிகரித்தாலும் பைக்கில் பின்னால் அமருவோர் அணிவதில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

சட்டவிதிகள், நீதிமன்ற உத்தரவு, காவல்துறையின் விழிப்புணர்வு இருந்தாலும் சுயஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் என்று அறிவுரை வழங்கியது நீதிமன்றம். உத்தரவுகளை மட்டும் பிறப்பிப்பதால் எந்த பயனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். ஹெல்மெட், சீட் பெல்ட் தொடர்பாக நவம்பர் 28-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் கேள்வி

அதிவேகத்தில் செல்பவர்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்களா? என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. போக்குவரத்து காவல்துறையில் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா? மேலும் எத்தனை காலி பணியிடங்கள் உள்ளன என்று பதிலளிக்க தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்