SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

2018-11-09@ 13:50:52

சென்னை : நேற்று தாயலாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டி உள்ள மலை தீபகற்பத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இந்த காற்றழுத்தத் தாழ்வு அடுத்து வரும் மூன்று தினங்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

வருகின்ற 13-ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை, இந்த பெருங்கடல் பகுதியில் நிலவிவருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த  24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போதைக்கு மழை வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனால் புயல் நெருங்கும்போது மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 5 செ.மீ, குடவாசலில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்