SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இ-வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையம் அமைக்கலாம் : மத்திய அரசு

2018-11-09@ 13:10:23

புதுடெல்லி : இ வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தொடங்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில் நாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்கஸ் போன்ற நிறுவனங்களும், ஓலோ, உபர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் நாடு முழுவதும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்திற்கும் சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் உரிமம் பெறாமலேயே சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் சிறு தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி, புனே, மும்பை, பெங்களூரு, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கியமான 9 நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கும் பொறுப்பை பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 11 நெடுஞ்சாலைகளை கண்டறிந்து ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்திற்கும் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்