SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு : 10-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட இதுவரை 539 பெண்கள் முன்பதிவு

2018-11-09@ 12:50:12

திருவனந்தபுரம் :சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க 10-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 539 பெண்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள போலீசார் உருவாக்கிய இணையதளத்தில் 539 பெண்கள் உள்பட 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெண்கள் அனுமதிக்கப்படுவதால் பாதுகாப்புப் பணியில் பெண் போலீசை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடப்பு சீசனை முன்னிட்டு அடுத்த மாதம் (டிசம்பர் 27-ந் தேதி) மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.

தொடர்ந்து 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்படும் என்று கூறியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (நவ. 5 ம் தேதி) சிறப்பு பூஜைக்காக நடை திறக்கப்படது. சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 6ம் தேதி மாலையில் நடை சாத்தப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிப்பட உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயன்று வரும் சூழ்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்களும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை 6 நாட்கள் திறந்திருந்த போது போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றனர். எனினும் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்