SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்!

2018-11-09@ 12:45:30

வாஷிங்டன் : முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் மாநாட்டில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில்செயல்பட கூடிய  இந்த  ஸ்மார்ட்போன், கேலக்சி எஃப் ஸ்க்ரீன் திறந்த நிலையில் 7.3 அங்குள்ள டிஸ்பிளேவில் டேப்லெட் போன்று பயன்படுத்தக் கூடியதாகவும் மடங்கிய நிலையில் 4.58 அங்குள்ள டிஸ்பிளேவுடன் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓஎல்இடி பேனல் வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த போனை ஸ்மார்ட்போனாகவும் டேப்லெட் ஆகவும் பயன்ப்படுத்தலாம். இரண்டு சிம் கார்டு வசதி 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி என்று சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை சுமார் 1லட்சத்து 10 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்