SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொருக்குப்பேட்டையில் பரபரப்பு : பேப்பர் குடோனில் தீ விபத்து

2018-11-09@ 02:48:03

சென்னை: கொருக்குப்பேட்டையில்  பேப்பர் குடோனில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளை பேப்பர் எரிந்து நாசமானது. மாணவர்கள் அலறி அடித்து ஓடியதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை அடுத்த கொருக்குப்பேட்டை தியாகப்பசெட்டி தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ் (45). இவர், அதே பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இங்கு, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியை புஷ்பராஜ், பேப்பர் குடோனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில், சவுகார்பேட்டையை சேர்ந்த அஜய் (34) என்பவர் குடோன் நடத்தி வருகிறார். இங்கு, 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 6ம் ேததி தீபாவளி என்பதால் குடோனுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை குடோன் திடீர் என தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், பல லட்சம் மதிப்பிலான வெள்ளை பேப்பர்கள்  எரிந்து சாம்பலானது. இதனிடையே, தீவிபத்ைத அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்தனர். பிறகு, தங்களது குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்து செல்ல தொடங்கினர். இதன் காரணமாக, நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக குடோனில் தீபிடித்ததா அல்லது முன்விரோதம் காரணமாக தீவைக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டு இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். குடோன் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்