SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிஎப் மேம்பால நில எடுப்பு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

2018-11-09@ 02:47:06

சென்னை,: கொளத்தூர் பிரதான சாலையையும், தெற்கு ஐ.சி.எப் சாலையையும் இணைக்கும் மேம்பாலத்திற்கான நில எடுப்பு பணிகளுக்கு ₹10 கோடி சென்னை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.
கொளத்தூர் பிரதான சாலை மற்றும் தெற்கு ஐ.சி.எப் சாலைக்கு இடையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மூடப்படுகிறது. பல ரயில்கள் இதைக் கடக்கும்போது 30 நிமிடங்கள் வரை மூடப்படும் நிலை ஏற்படுகிறது.இந்நிலையில், இந்த லெவல் கிராசிங்கிற்கு மாற்றாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொளத்தூர் பிரதான சாலையையும், தெற்கு ஐ.சி.எப் சாலையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் 2003ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. இந்த திட்டம், சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ₹58.50 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ₹25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஐ.சி.எப். நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கான தொகையும் அடங்கும்.இந்நிலையில், இந்த திட்டத்திற்கு தேவையான 1222 சதுர அடி நிலத்தை மாநகராட்சிக்கு அளிக்க கோரி சென்னை மாநகராட்சி சார்பில் ஐபிஎப் பொது மேலாளருக்கு 2017ம் ஆண்டு கடிதம் எழுதப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஐசிஎப் பொது மேலாளர், 35 ஆண்டு குத்தகை அடிப்படையில் மாநகராட்சிக்கு அந்த நிலத்தை அளிக்க ஒப்புதல் அளித்தார். ேமலும் இதற்காக 10 கோடி செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை அகற்ற கோரியும் கடிதம் எழுதப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதன்படி நில எடுப்பு பணிக்காக ₹10 கோடி, சென்னை குடிநீர் வாரியத்திற்கு ₹60 லட்சம், மின்சார வாரியத்திற்கு ₹55 லட்சம் உட்பட ₹11.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த உடன் வரைவு இறுதி திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.தொடர்ந்து ஒப்பந்தம் கோரும் பணி நிறைவுற்றவுடன், விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த மேம்பாலம் கொளத்தூர் பகுதியை அண்ணாநகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். மேம்பாலத்தினால் கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி, ஐ.சி.எப். அண்ணாநகர் மற்றும் பெரம்பூர் பகுதி மக்கள் மிகவும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்