SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத் முதல் கன்னியாகுமரி வரை புதிய கப்பல் வழித்தடத்துக்கு எதிர்ப்பு: மீனவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு

2018-11-09@ 01:57:27

நாகர்கோவில்: குஜராத் முதல் கன்னியாகுமரி வரை அமைய உள்ள புதிய கப்பல் வழித்தடத்துக்கு நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் கன்னியாகுமரி மற்றும் சின்னமுட்டம் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தொழில் கால அளவினை நீடிப்பது தொடர்பாகவும், குஜராத் முதல் கன்னியாகுமரி வரையிலான புதிய கப்பல் வழித்தடம் தொடர்பாகவும் மீனவர்களின் கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மீன்துறை கூடுதல் இயக்குனர் டோம் வர்க்கீஸ் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:சேவியர் மனோகரன்: சின்னமுட்டம் மீனவர்கள் காலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டு இரவிலேயே கரை திரும்புகின்றனர். இம்மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.  எனவே சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி காலநேரத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்படாது. அது மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும்.

ராமன்துறை செல்வராஜ்: தமிழகத்தில் நிறைய மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. எல்லா துறைமுகத்திலும் எந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீன்பிடிக்கும் வகையில் அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும்.ஆன்றோ: அரபிக்கடலில் சர்வதேச கடல் வழிப்பாதை கரையிலிருந்து 40 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு, கரையிலிருந்து 15 மைல் தொலைவில் புதிய உள்நாட்டு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமைக்க இந்திய கப்பல் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடம் அமைந்தால் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 20 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது சர்வதேச கடல் வழித்தடத்திலேயே உள்நாட்டு கப்பல் வழித்தடத்தை செயல்படுத்த வேண்டும். கூட்டத்தில் இதே கருத்தை மீனவர்கள் பலரும் தெரிவித்தனர். மீனவர்களின் கருத்துகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் பதில் அளித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்