SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலவச பொருள் வேண்டாம் என்று மக்கள்தான்சொல்ல வேண்டும்: அமைச்சர் காமராஜ் கருத்து

2018-11-09@ 01:57:25

மன்னார்குடி: `இலவச பொருட்கள் வேண்டாம் என்று சொல்லக்கூடிய தகுதி பொதுமக்களுக்கு மட்டுமே உள்ளது’ என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு நேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வந்தார். அங்கு  காய்ச்சல் காரணமாக  சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம்  விசாரித்தார்.அப்போது காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வடகிழக்கு  பருவமழையையொட்டி அனைத்து துறை  அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவாரூர்   மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 26 பேரும், சாதாரண  காய்ச்சலுக்கு  15 பேரும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி  உள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கையாக  மாவட்டம் முழுவதும்  30 மருத்துவக்  குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  

மறைந்த முதல்வர் ெஜயலலிதா கொண்டு வந்த விலையில்லா  மடிக்கணினி திட்டத்தால் உயர்கல்வியில் தமிழகம் 48.6 சதவீதம் வளர்ச்சி  அடைந்துள்ளது.   விலையில்லா ஆடு, கோழி, கறவை மாடு வழங்கும் திட்டத்தால்  கிராமப்புற மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. விலையில்லா அரிசி  திட்டத்தால் பசி இல்லாத தமிழகமாய் உருவாகி உள்ளது. இலவச  பொருட்கள் வேண்டாம் என சொல்லக்கூடிய தகுதி பொதுமக்களுக்கு மட்டுமே உள்ளது.  நடிகர்கள் திரைப்படங்களில் பேசும் வீராப்பு வசனங்கள் மக்களிடம் எடுபடாது. இவ்வாறு காமராஜ் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்