SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சர்கார் திரைப்பட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்: அமைச்சர் உதயகுமார் ஆவேசம்

2018-11-09@ 01:51:35

திருமங்கலம்:  சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் காட்சிகளை, உடனடியாக நீக்க வேண்டுமென அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான உதயகுமார், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் திட்டம், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். தமிழகத்தின் ஜீவாதார உரிமைக்காக போராடி, இந்திய நாடாளுமன்றத்தில் பாராட்டு பெற்றார். இப்படி பல்வேறு சாதனைகளை செய்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் உண்டாக்கும் வகையில், சர்கார் திரைப்படத்தில் கற்பனையாக காட்சியை சித்தரித்துள்ளனர்.

இதன்மூலம் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனத்தையும் புண்படுத்தியுள்ளனர். படத்தை இயக்கிய டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய்க்கு, ஜெயலலிதா பேரவை சார்பில் கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஜெயலலிதாவின் திட்டங்கள் குறித்து நாங்கள் விவாதம் செய்ய தயார்? நீங்களும் விவாதம் செய்ய தயாரா? 3 மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்காக முன்னாள் முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் காட்சிகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு களங்கம் செய்யும் வகையில் அமைந்துள்ள இக்காட்சிகளை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் தலைமையின் அனுமதி பெற்று உரிய பதிலடியை ஜெயலலிதா பேரவை தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்