SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் அந்தமான் அருகே புயல் சின்னம்: வானிலை மையம் அறிவிப்பு

2018-11-09@ 01:42:16

சென்னை: அந்தமானை ஒட்டிய தாய்லாந்து மற்றும் மலேசிய கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு  இருந்த காற்றழுத்தம் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றுவிட்டது. இதனால் வடதமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் மழை  பெய்து வருகிறது.இந்நிலையில், தெற்கு சீனக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்தம் உருவாகி அது தாய்லாந்து கடல் பகுதிக்கு நகர்ந்து வந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. அந்த புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக  தாய்லாந்து மற்றும் மலேசிய கடல் பகுதியை ஒட்டி நிலை கொண்டுள்ளது. அது அந்தமான் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்தால் அது வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வங்கக் கடலில் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கி பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசத் தொடங்கும். கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும். 10ம்  தேதி கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும். 11ம் தேதி வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசும். 12ம் தேதி 80 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். அதனால் 9 முதல் 12ம் தேதி வரை அந்தமான் மற்றும் அதை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.  சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்