SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை புதுவை எம்எல்ஏ தகுதி நீக்கம் : சபாநாயகர் அறிவிப்பு

2018-11-09@ 01:42:10

புதுச்சேரி: சொத்து குவிப்பு வழக்கில் ஒரு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், அசோக் ஆனந்த்.  இவரது தந்தை ஆனந்தன், கடந்த 2008ம் ஆண்டு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக  பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றது. அதன்படி விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.   ஆகியோர் ₹1 கோடியே 74 லட்சத்து 36 ஆயிரத்து 839க்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் புதுச்சேரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி தீர்ப்பு வழங்கியது.  குற்றம் சாட்டப்பட்ட அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., ஆனந்தன் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், தலா ஒரு  லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக குவிக்கப்பட்ட ரூ.1.74 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அசோக்கை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலகம் நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் 13 உட்பிரிவு(2) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 109ன்படி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்துவை குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும் ஒரு ஆண்டு  சிறைதண்டனையும், ஒரு லட்சம் அபாராதமும் விதித்துள்ளது. ₹1 கோடியே 74 லட்சத்து 36 ஆயிரத்து 839 மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. எனவே 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8, இந்திய அரசியலமைப்பு சட்டம் 102 பிரிவு 14(1) மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963ன் படி அசோக் ஆனந்த், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம்  செய்யப்படுகிறார். அதன்படி தண்டனை வழங்கப்பட்ட கடந்த அக்டோபர் 30ம் தேதி முதல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 43ன்படி தண்டனை காலம் முடிந்து, அடுத்த 6 ஆண்டுகள் வரை அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே மேற்கண்ட  காரணங்களால் தண்டனை வழங்கப்பட்ட தேதியிலிருந்து தட்டாஞ்சாவடி தொகுதி காலியாகவுள்ளதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

  • bangladeshfire

    வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்