SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதி மீறி பட்டாசு வெடித்ததாக பதிவான வழக்குகளை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

2018-11-09@ 01:14:11

சென்னை: தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எம்.கலைச்செல்வி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வரின் தனி பிரிவில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:
வெடிப்பதால் விளையும் மாசு கட்டுப்பாடு குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டு விதியை அறிவித்திருந்தது.

இதையொட்டி கடந்த 6ம் தேதி அரசு விதிகளுக்குட்பட்டு பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடினர். ஆனால் விதி மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் மீது சுமார் 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் நோக்கில் அப்பாவி பொதுமக்கள் மீது வேண்டுமென்றே பதியப்பட்ட வழக்குகள் ஆகும். இதனால் வழக்கு பதிய பெற்றவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விதி மீறி பட்டாசு வெடித்ததாக காவல் துறையால் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாகவும், சங்கத்தின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்