SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் யார் தடுக்கிறார்கள்?: ஆணையத்துக்கு ஐகோர்ட் கேள்வி

2018-11-09@ 01:11:36

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு யார் தடங்கலாக உள்ளனர் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையதுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தேர்தல் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.  மனு அப்போது விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2017 நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய  டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், மாநிலத் தேர்தல் ஆணைய மூத்த வக்கீல் கே.துரைசாமியிடம், தன்னிச்சையான  அமைப்பான மாநில தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உத்தரவின் படி, தேர்தலை அறிவித்திருந்தால், தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் 1996ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரையறை அடிப்படையில் தற்போது ஏன் தேர்தல் நடத்தக் கூடாது. தேர்தல் நடத்தாமல் இருக்க உங்களை எது தடுக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.  அதற்கு தேர்தல் ஆணைய வக்கீல், தீர்ப்பை அமல்படுத்த தான்  அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளோம். வார்டு மறுவரையறை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால்தான் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றார்.

 அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன்,  அரசின் அவசர சட்டமும், சட்டமும் எந்த வகையிலும் தேர்தல் நடத்த தடையாக இல்லை. இந்நீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்தின்மீது குற்றச்சாட்டுக்களை  பதிவு செய்யாவிட்டால் தேர்தல் நடத்துவதில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குகள் விசாரணை சுழற்சி முறைப்படி, தேர்தல் நடத்த அவகாசம் கோரிய தேர்தல் ஆணையத்தின் மனுவை நீதிபதி மணிக்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தான் விசாரிக்க வேண்டும்.  எனவே, இது குறித்து தேர்தல் ஆணைய தரப்பு வக்கீல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்