SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலை மேல்முறையீடு வழக்கில் பக்தர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்: கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா நம்பிக்கை

2018-11-09@ 01:11:33

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 13ம் தேதி எடுத்துக்கொள்ளப்பட உள்ள சபரிமலை  குறித்த மேல்முறையீடு மனுக்கள் மீதான வழக்கில், பக்தர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என கேரள மாநில காங்கிரஸ்  தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  ரமேஷ் சென்னிதாலா கூறினார்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரமேஷ் சென்னிதாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது.தற்போதைய சபரிமலை குறித்த தீர்ப்பு 99 சதவிகித பெண்களிடம் ஆதரவு பெறவில்லை. இந்த மறு சீராய்வு மனுக்களை பரிசீலிக்கும்போது, சபரிமலையில் தற்போது நிலவும் நிலவரத்தை கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இதற்காக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் சிங்வியை சபரிமலை வழக்கில் ஆஜராக கேரள காங்கிரஸ்  நியமித்துள்ளது.

மத சார்பின்மைக்கு  எடுத்துக்காட்டான இடம் என்றால் அது சபரிமலை தான். சபரிமலைக்கு ஜாதி, மதம் கடந்து கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என அனைத்து தரப்பினரும் சென்று வருகிறார்கள்.பாஜ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக எடுத்துள்ள நிலைப்பாடுகளை காங்கிரஸ் கட்சி மக்களிடையே தெளிவுபடுத்த பாத யாத்திரைகளை ஏற்பாடு செய்துள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் 2 வாகன  யாத்திரைகளும், 3 பாத யாத்திரைளும் நடத்தப்பட உள்ளது.காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் யாத்திரைகள் நடத்தி விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள்.கேரள  அரசு சபரிமலை விவகாரத்தை கையாளுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் இடத்தில் அமைதியையும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதபடி ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு  தவறிவிட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் கேரள அரசு தனது நடவடிக்கைகளால் சபரிமலை புனித யாத்திரையின் முக்கியத்துவத்தை குறைக்கிறது. இது தவறு.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

  • mexicoblast

    மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

  • 21-01-2019

    21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்