SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல ரவுடியை வெட்டிக்கொன்று இதயத்தை அறுத்து எடுத்து சென்றனர் : ஆந்திராவில் பரபரப்பு

2018-11-09@ 01:01:45

திருமலை: ஆந்திராவில் பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்து இதயத்தை அறுத்து எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், சாய்பாபா சஞ்சீவி நகரைச்  சேர்ந்தவர் பிரபல ரவுடி சென்னய்யா. இவர் பல்வேறு வழக்குகளில் சிறை சென்று வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை  துங்கபத்ரா நதிக்கரையில் வாலிபர் ஒருவர் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் துங்கபத்ரா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், சென்னய்யாவை கொன்று இதயத்தை அறுத்து எடுத்துச்சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு காரணம் முன் பகையாக  இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னய்யாவிற்கும் மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சென்னய்யா திருந்தி கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடியை கொலை செய்து  இருதயத்தை அறுத்து எடுத்துச்சென்ற சம்பவம் கர்னூலில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்