SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடுமையான நிதி நெருக்கடியால் ரிசர்வ் வங்கியை கைப்பற்ற மோடி அரசு முயற்சி : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

2018-11-09@ 00:55:29

கொல்கத்தா: ‘‘கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கியை கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது’’ என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:ரிசர்வ் வங்கி வாரியத்தில் தங்களுக்கு வேண்டியவர்களை மோடி அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கி வாரிய கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது. மத்திய அரசு நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. தேர்தல் ஆண்டு என்பதால், அனைத்து செலவுகளையும் செய்ய அது விரும்புகிறது. இதற்கு வழியில்லாமல் போன விரக்தியில், ரிசர்வ் வங்கியிடம் ₹1 லட்சம் கோடி கேட்கிறது மத்திய அரசு. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் மறுத்தால், ஆர்பிஐ சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் ₹1 லட்சம் கோடியை மத்திய அரசு கணக்கில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி மறுத்தாலோ அல்லது ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா செய்தாலோ அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. அது மீண்டும் இந்துத்துவா கொள்கைக்கு சென்று விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மாநில கூட்டணி பயன் அளிக்கும்
கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்த சிதம்பரம், ‘‘கர்நாடகாவில் அமைக்கப்பட்ட கூட்டணி நல்ல பயன் அளித்துள்ளது. இதே போன்ற கூட்டணியை வெவ்வேறு மாநிலங்களில் அமைக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்