SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம்

2018-11-08@ 19:30:01

புதுச்சேரி : சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல். ஏ.வாக அசோக் ஆனந்த் இருந்தார். இதன்மூலம்  தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ மற்றும் அவரின் தந்தை இருவருக்கும் தலா ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்தன் 2007-08  ஆகிய வருடங்களில்  புதுச்சேரி மாநிலப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். இவர்களுக்குச் சொந்தமாகத் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஆனந்தன் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிமாகச் சொத்துகளைக் குவித்ததாக சி.பி.ஐ-க்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்தன் மற்றும் அவரின் மகன் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  தலைமை நீதிபதி தனபால் இருவருக்கும் தலா ஒரு வருடம் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் அபராதம் கட்டத்தவறினால் தலா 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் வருமானத்துக்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட ரூ. 1.57 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த நிலையில் நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்