மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா

கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/25/2013 3:27:10 PM
MORE VIDEOS

சென்னை: மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை 3 மணிக்கு அறுபத்துமூவர் திருவிழா நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17ம் தேதி கோலவிழியம்மனுக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. 18ம் தேதி கொடியேற்றமும், 19ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 20ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 21ம் தேதி புருஷா மிருகமும், 22ம் தேதி சவுடல் விமானமும், 23ம் தேதி பல்லக்கும் நடந்தது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 7 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9.01 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்தனர்.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்துமூவர் திருவிழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. நாயன்மார்கள் 63 பேர் புடை சூழ விநாயகப்பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அறுபத்துமூவர் விழாவையொட்டி இன்று காலை 9 மணிக்கு திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நடந்தது. இதையடுத்து என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடந்தது. அறுபத்துமூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. விழாவை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதால் மயிலையில் எங்கு திரும்பினாலும் நெரிசல் காணப்பட்டது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சைவ சமயத்தார் போன்றோர் பல இடங்களில் நீர் மோர், பானகம், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

கி.பி. 2250... பூமியில் உள்ள இயற்கை வளங்கள் முற்றிலுமாக அழிந்து போகின்றன. பஞ்சம் பிழைக்கப் போன கிராமத்துவாசி போல, மூட்டை  முடிச்சுகளுடன் மனிதர்கள் கிளம்புகிறார்கள். அவர்கள் வாழத் ...

உத்ரா உன்னிகிருஷ்ணன்இதோ இன்னுமொரு இசை வாரிசு... ‘சைவம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகிறாள் உத்ரா உன்னிகிருஷ்ணன்.  யெஸ்... பெயரின் பாதியே அவளது அறிமுகம் ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

23

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
மேன்மை
பாராட்டு
தடங்கல்
விரையம்
தேவை
சமயோஜிதம்
மகிழ்ச்சி
சமாளிப்பு
அந்தஸ்து
தைரியம்
ஆன்மிகம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran