SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்

2018-11-04@ 01:01:36

டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களின் மார்க்கெட்டை குறி வைத்து, கடந்த மாதம் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு  இதுவரை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காத்திருப்பு காலம் வேரியண்ட்டுக்கு ஏற்ப, 6 வாரங்கள் வரை நீடிக்கிறது. சுறா மீனின் உருவ அமைப்பு அம்சங்களுடன் டிசைன் செய்யப்பட்ட இந்த காரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. டபுள் பேரல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல  அலாய் வீல்கள், சுறா துடுப்பை நினைவூட்டும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் இந்த கார் அசத்தலாக வந்தது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.  இதுதவிர, சர்ரவுண்ட் கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் மற்றும் பெஞ்ச் இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது.

இரண்டு ஏர்பேக், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு  இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஆட்டோமேட்டிக்  கியர்பாக்ஸ் மாடலும், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு விற்பனை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இப்புதிய மஹிந்திரா மராஸ்ஸோ  கார் ₹9.99 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ₹13.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்