பாலியல் தொழில் நடத்த அனுமதி அளித்த 2 இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு: ஐகோர்ட் அதிரடி
2018-10-30@ 00:42:57

சென்னை: லஞ்சம் வாங்கிக்கொண்டு விபசாரத்தை அனுமதித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது 2 மாதத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்பர் அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மே மாதம் வெளியான பத்திரிக்கை செய்தியில் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் (சாம் வின்சன்ட் மற்றும் சரவணன்) விபசாரத்தை தொழிலாக செய்யும் புரோக்கர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு விபசாரத்தை அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் இருவரும் வேறு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். மக்களுக்காக பணியாற்ற இரு காவலர்களும் தகுதியற்றவர்கள், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எப்படி நேர்மையாக மக்கள் பணியாற்ற முடியும்.
அதனால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்து அவர்கள் மீது சட்ட விரோத கடத்தல் சட்டத்தின் படி குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தேன். அதன் மீது உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் புகாரில் கூறபட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விபச்சாரத்தை அனுமதித்த இன்ஸ்பெக்டர்கள் மீது 2 மாதத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கம்
ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்பு: சென்னையில் வெங்காயத்தின் விலை ரூ.40 வரை குறைவு...இல்லத்தரசிகள் மகிழச்சி
ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டுமே தவிர உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா: என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது...ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
குழந்தை மர்ம சாவில் திடீர் திருப்பம் தாயின் கள்ளக்காதலன் கொன்றது அம்பலம்: பரபரப்பு வாக்குமூலம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்: 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்