SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டுகொள்ளப்படாத தமிழக மின்திட்டங்கள்

2018-10-28@ 02:09:56

கோவை: தமிழக மின்திட்டங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதால் அந்திய முதலீடுகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தமிழக மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டுமென்றால் தமிழக  அரசுக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம்கோடிநிதி தேவை. ஆனால், அந்த அளவுக்கு தமிழக அரசிடம் நிதியில்லை, அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லை. கடந்த  15 ஆண்டுகளில் தமிழகத்தின் மின்தேவை சுமார் 5,000  மெகாவாட்டில் இருந்து  15,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த காலத்தில் தமிழ்நாடு  மின்சார வாரியம் 1800 மெகாவாட்  திறன் கொண்ட 3 மின்திட்டங்களை மட்டுமே  செயல்படுத்தியுள்ளது. அதேநேரத்தில்,  இதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் தனியார்  மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் 10,000 மெகாவாட்  திறன்கொண்ட மின்திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டுள்ளன.

புதிய மின் திட்டங்கள் இல்லாத காரணத்தால் தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் அடிக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் 5.50 முதல் 15.14 வரை கொடுத்து வாங்கப்படுகிறது.  மின்உற்பத்தியை அதிகரிக்க, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்திட்ட பணிகள் முடிவடையாமல், அரைகுறையாக தொங்கிக்கொண்டு இருக்கின்றன. பல வருடங்களாக இவை இழுபறியாக இருக்கிறது. தமிழகத்தில்  உடன்குடியில் ஒன்றும்,  எண்ணூரில் இரண்டுமாக 3 அனல்மின் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.  இவற்றின் மூலம் மொத்தம் 3,300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். உடன்குடி அனல் மின்நிலைய  கட்டுமான  பணிகளை, 2013-ம் ஆண்டு துவங்கி, 2017ம் ஆண்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம், 1,320 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு  இருந்தது. ஆனால்  இத்திட்டங்கள் இன்னும் முடியாமல் தொங்கலில்  உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், அதானி குழுமத்தால் 648 மெகாவாட் திறன்கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் துவங்க கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இங்கு  தயாராகும் சூரிய மின்சாரத்தை தமிழக அரசிற்கு வழங்க, யூனிட் ஒன்றிற்கு ₹7.01 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இத்திட்டப்பணிகளும் மந்தகதியில் நடந்து வருகிறது.  எனவே, அடுத்த 5 அல்லது 10  ஆண்டுகளில் தமிழகத்தின் மின்பற்றாக்குறை மேலும் அதிகரித்து 3 ஆயிரம் மெகாவாட் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக  அரசு சுதாரித்துக்கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு, துரித  கதியில் மின்  உற்பத்தியை அதிகரிக்க முயலாவிட்டால், இங்குள்ள அந்திய முதலீடு  ேவறு மாநிலத்துக்கு இடம்ெபயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அத்துடன், கோடைகாலமான  வரும் ஏப்ரல், மே மாதங்களில் மிக கடுமையான  மின்வெட்டை தமிழகம் சந்திக்க  நேரிடும். இந்த அபாயத்தை தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என ெதரியவில்ைல.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்