SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டாய விடுப்பை எதிர்த்து சிபிஐ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

2018-10-24@ 11:30:10

டெல்லி: கட்டாய விடுப்பில் அளிக்கப்பட்டதை எதிர்த்து அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மத்திய அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள நிலையில் கட்டாய விடுப்பு என்பதை ஏற்க முடியாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே அண்மைக் காலமாக மோதல் நிலவி வந்தது. இதனை அடுத்து அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி சம்மன் அனுப்பியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இன்று காலை சிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. லஞ்சப் புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர் ஆலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பும் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்