SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ30 லட்சம் மோசடி புகார் அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

2018-10-24@ 01:17:21

புதுடெல்லி: தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீதான ரூ30 லட்சம் மோசடி தொடர்பான புகாரில் எந்தவித முகாந்திரமும் கிடையாது எனக்கூறி அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை மயிலாப்பூரில் எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களை காலி செய்ய வைப்பதற்காக அமைச்சர் காமராஜுக்கு ரூ30 லட்சம் லஞ்சமாக கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிக்கொணடு அமைச்சர் காமராஜ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிப்பு செய்தார். இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால், அமைச்சர் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த ஏப்ரல் 28ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து வழக்கை நடத்த காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் என்வி.ரமணா மற்றும் சந்தான கவுடர் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  காவல் நிலைய விசாரணைக்கு மனுதாரரான குமார் சரிவர நேரில் ஆஜராகி பதிலளிக்கவில்லை என அமைச்சர் காமராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அமைச்சர் காமராஜ் மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் எந்தவித முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்