SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘மீடூ' அமைப்பை தவறாக பயன்படுத்தக் கூடாது: ஏ.ஆர்.ரகுமான் டிவிட்டரில் கருத்து

2018-10-24@ 01:09:52

சென்னை: நாடு முழுவதும் ‘மீடூ' என்ற அமைப்பு மூலம், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு பிரிவினர் மீது  குற்றச்சாட்டு சுமத்தி வருவது பேரதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘மீடூ' பதிவுகளை மிக உன்னிப்பாக கவனித்து  வருகிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என இரு பிரிவினரின்  பெயர்களும் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. என் சினிமா துறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த துறை பெண்களுக்கு மரியாதை செலுத்துவதாக அமைய வேண்டும்.  பாதிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கும் துணிச்சல் அதிகரிக்கட்டும்.

நானும்,  என் குழுவினரும் பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்கி வைத்துள்ளோம். பணி  செய்பவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி, அதில் அவர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்கிறோம். பாதிக்கப்பட்ட  பெண்கள் தங்கள் குரலை எழுப்ப சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவுகின்றன. இந்நிலையில், ஒருவேளை அது தவறாக பயன்படுத்தப்பட்டால், அதை கண்காணிக்க இணையதளங்களுக்கான புதிய நீதியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்