SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5வது ஒருநாள் போட்டி இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி

2018-10-24@ 00:49:18

கொழும்பு: இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை வசப்படுத்த, இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை  கைப்பற்றியது.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ரன் குவித்தது. தொடக்க வீரர் டிக்வெல்லா 95 ரன் (97 பந்து, 12  பவுண்டரி) விளாசினார். சமரவிக்ரமா 54, கேப்டன் சண்டிமால் 80 ரன் (73 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குசால் மெண்டிஸ் 56 ரன் (33 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர். ஷனகா 18, திசாரா பெரேரா 11  ரன்னில் வெளியேறினர். தனஞ்ஜெயா டி சில்வா 19, அகிலா தனஞ்ஜெயா 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் கரன், மொயீன் அலி தலா 2, ரஷித், பிளங்கெட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 367 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து  அணி களமிறங்கியது. இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த இங்கிலாந்து, 26.1 ஓவரில் 132 ரன்னுக்கு 9 விக்கெட்டை  பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

பென் ஸ்டோக்ஸ் 67 ரன் (60 பந்து, 12 பவுண்டரி), மொயீன் அலி 37, ஜோ ரூட் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.மழை காரணமாக ஆட்டம் தடைபட்டாலும், இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுவது உறுதியானது. இலங்கை பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா 4, சமீரா 3, ரஜிதா, டிசில்வா தலா 1 விக்கெட்  வீழ்த்தினர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் மோதும் டி20 போட்டி 27ம் தேதியும், அதைத் தொடர்ந்து 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்