SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய கலால் அணி வெற்றி

2018-10-24@ 00:49:17

சென்னை: சென்னை டிவிஷன் சூப்பர் சிக்ஸ் ஹாக்கிப் போட்டியில்  மத்திய கலால் அணி 7 - 1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.சென்னை ஹாக்கி சங்கம்,  ஸ்ரீராம் நிறுவனம் இணைந்து டிவிஷன் ஹாக்கி போட்டியை நடத்தி வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் லீக் போட்டிகள் நடைப்பெற்றன. அதில்  சென்னை மாநகர காவல்துறை, தெற்கு ரயில்வே, தமிழ்நாடு காவல்துறை, மத்திய கலால், வருமானவரித் துறை, சென்னை துறைமுகம், ஏபிஎம் இன்ஃபோடெக், இந்தியன் வங்கி, ஏஜிஎஸ்,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஎப், இந்திராகாந்தி நினைவுக் குழு, இந்திய விளையாட்டு ஆணையம் ஆகிய அணிகள் பங்கேற்றன.இதில் ஏ பிரிவில்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய கலால், இந்தியன் வங்கி, பி பிரிவில் ஐசிஎப், தெற்கு ரயில்வே, இந்திய விளயைாட்டு ஆணையம் ஆகிய 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி  பெற்றன. இந்த சுற்று போட்டிகள் 2 வார இடைவெளிக்கு பிறகு இப்போது நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியன் வங்கி 4-3 என்ற கோல் கணக்கில் ‘சாய்’ அணியை வீழத்தியது. ஐஓபி அணி 5-2 என்ற கோல் கணக்கில்  மத்திய கலால் அணியையும்,  ஐசிஎப் 4-1  என்ற கணக்கில் இந்தியன் வங்கியையும் வீழ்த்தின.
நேற்று  நடைப்பெற்ற சூப்பர் சிக்ஸ் போட்டியில்  மத்திய கலால் -,  தெற்கு ரயில்வே மோதின. அதில் மத்திய கலால் அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின்  ஹசன் பாஷா  4கோல் அடித்து அசத்தினார் (2, 22, 44, 58வது நிமிடம்). ஜே.சதீஷ்  (5’), எஸ்.பாலாஜி (52’, 59’) கோல் போட்டனர். தெற்கு ரயில்வே அணியின் மனோஜ் 69வது நிமிடத்தில்  ஆறுதல் கோல் அடித்தார். இன்று மாலை தெற்கு ரயில்வே - ‘சாய்’ அணிகள்  மோதுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்