SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தியோதர் டிராபி கிரிக்கெட் 43 ரன் வித்தியாசத்தில் இந்தியா பி வெற்றி: கார்த்திக், அஷ்வின் போராட்டம் வீண்

2018-10-24@ 00:49:16

புதுடெல்லி: தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், இந்தியா பி அணி 43 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது.பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா பி அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன் குவித்தது. ஹனுமா விஹாரி  ஆட்டமிழக்காமல் 87 ரன் (95 பந்து, 9 பவுண்டரி) விளாசினார். மயாங்க் அகர்வால் 46, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 41, மனோஜ் திவாரி 52 ரன் (58 பந்து. 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஐந்து வீரர்கள்  ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.இந்தியா ஏ பந்துவீச்சில் அஷ்வின் 2, குல்கர்னி, சிராஜ், கவுல், குருணல், கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 262 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா  ஏ அணி 19.4 ஓவரில் 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. பிரித்வி ஷா 7, கருண் நாயர் 0, அங்கித் பாவ்னே 3, குருணல் பாண்டியா 17 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்த நிலையில்  கேப்டன் தினேஷ் கார்த்திக் - அஷ்வின் ஜோடி 6வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 123 ரன் சேர்த்து வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியது.

எனினும், கார்த்திக் 99 ரன் (114 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 54 ரன் (76 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். 42.1 ஓவரில் 5  விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்த இந்தியா ஏ அணி, மேற்கொண்டு 8 ரன் மட்டுமே சேர்த்து எஞ்சிய 5 விக்கெட்டையும் பறிகொடுத்தது. அந்த அணி 46.4 ஓவரில் 218 ரன்னுக்கு ஆல்  அவுட்டானது. இந்தியா பி பந்துவீச்சில் மார்கண்டே 4, ஷாபாஸ் நதீம் 3, வருண் ஆரோன் 2, சாஹர் 1 விக்கெட் வீழ்த்தினர். நதீம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 43 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா பி அணி 4  புள்ளிகளை தட்டிச் சென்றது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் மோதுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்