SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூபாய் வீழ்ச்சியும் வராக்கடனும் கவலை அளிக்கும் விஷயங்கள்: பிமல் ஜலான் கருத்து

2018-10-22@ 01:15:22

புதுடெல்லி: ரூபாய் மதிப்பு சரிந்து வருவதும், வராக்கடன் அதிகரிப்பும் கவலை அளிக்கக்கூடிய விஷயங்கள் என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் கூறினார். பணமதிப்பு நீக்கம் உட்பட கருப்பு பண மீட்புக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதேநேரத்தில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது இறக்குமதி செலவை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாகி விடுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் நேற்று கூறியதாவது: ஜிஎஸ்டி, திவால் சட்டம், வங்கிக் கணக்கு மூலம் நேரடி மானியம் போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியது. இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பான நடைமுறைகள்.

வளர்ந்து வரும் நாடுகளில் நம் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்பதிலும் ஐயமில்லை. பணவீக்கமும் குறைவுதான். இருப்பினும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதுபோல், வராக்கடனும் அதிகமாக உள்ளது. இவை தொடர்ந்து கவலை அளிக்கக்கூடிய விஷயங்களாக உள்ளன. குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பை நிலை நிறுத்த மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் திவால் சட்டத்தால் வராக்கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சில மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்கள், தவறான ஆட்சி முறை ஆகியவற்றாலும் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்