SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உண்மைக்கு புறம்பான செய்தியை ''இந்து'' நாளிதழ் வெளியிட்டுள்ளத

2013-03-22@ 02:10:57

சென்னை : மத்திய அமைச்சரவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவு திமுகவின் ஒருமித்த முடிவாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவோ எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுக தலைமையில் உள்ள முன்னோடிகள் கூடி கலந்து பேசி பிரச்னையை முழுமையாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவெடுப்பது வழக்கம்.
 
செய்தியாளர்கள் பலமுறை சில அதிமுக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கும்போது கூட, திமுக செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகுதான் முடிவெடுத்து அறிவிக்குமென்று நான் பல முறை கூறியிருக்கிறேன். ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் தொடர்ச்சியாக நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக மூத்த செயலாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத்தான் 19,3,2013ல் காலை செய்தியாளர்களுக்கு அறிவித்தேன்.

உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

plavix plavix 300 plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

 • 22-11-2019

  22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • watervapormoon

  வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்