SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பறிமுதல் வாகனங்களில் தேங்கும் மழைநீரால் திருவள்ளூர் போலீசாருக்கு டெங்கு அபாயம்

2018-10-20@ 17:59:46

திருவள்ளூர்: அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றி செல்லுதல், மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துதல், நகை பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வழக்கு நடப்பதால் உரிமையாளர்கள் வாகனங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். போலீசாரும் அவற்றை பராமரிப்பதில்லை. மழையிலும், வெயிலிலும் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கும் வாகனங்கள் பயன்பாடின்றி துரு பிடித்த நிலையில் வீணாகி வருகின்றன.

வழக்கு முடிந்த வாகனங்களையும் அதன் உரிமையாளர்கள் எடுக்க வராததால், புதிதாக வழக்குகளில் சிக்கும் வாகனங்களை ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்த முடியாமல், பார்க்கிங் இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. மழை பெய்யும்போது பறிமுதல் வாகனங்களில் தேங்கும் தண்ணீரால், அதிகம் கொசு உற்பத்தியாகும் இடமாக போலீஸ் நிலையங்கள் உள்ளது.இதன்மூலம் போலீசாருக்கு அதிகளவில் டெங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் நேற்று திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்குள் சென்று கொசு ஒழிப்பு புகை அடித்தனர். இதேபோல், டிஎஸ்பி அலுவலகத்தில் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்