SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குச்சந்தையில் சரிவு

2018-10-18@ 00:06:35

மும்பை: பங்குச்சந்தையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். ஆனால், இந்த வார தொடக்கத்தில் இருந்து பங்குச்சந்தை சற்று ஏற்றம் பெற்றது. நேற்று திடீரென பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. முக்கிய பங்குகள் மதிப்பு குறைந்ததால் 880 புள்ளிகள் வரை ஊசலாட்டம் ஏற்பட்டது. ரூபாய் மதிப்பு நேற்று காலை 6 காசு அதிகரித்திருந்தாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் 10 காசு அளவுக்கு மதிப்பு குறைந்தது. மாலையில் 13 காசு குறைந்து ரூ73.61ஆக இருந்தது.

இதன் காரணமாக பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்ைத குறியீடு 440 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தக முடிவில் 382.9 புள்ளி சரிந்து 34,779.58 ஆக இருந்தது. 23 பங்குகளின் மதிப்பு சரிந்தது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 131.7 புள்ளி சரிந்து 10,453.05 ஆக இருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்