SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரட்டைக்கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவு

2018-10-16@ 14:18:10

டெல்லி : இரட்டைக் கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால், தனது ஆசிரமத்தில் அடைத்து வைத்து கொன்றதாக புகார் அளித்தார். பின்னர் ஒரு கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்த சாமியார் ராம்பால், கடந்த 2006-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் இது போன்று உ..பி.யின் லலித்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ராம்பால் மீது கூறினார்.

இந்த இரட்டைக் கொலைகள் தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராம்பாலின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியடைந்த உயர்நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்து ஆஜர் படுத்தும்படி உத்தரவிட் டது. அதனை நிறைவேற்றுவதற்காக, போலீசார், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் ஆசிரமத்தை சாமியாரின் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டதால், ஆசிரமத்துக்குள் போலீசாரால் நுழைய முடியவில்லை.

ராம்பாலின் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேர் ஆசிரமத்தில் வாயிலில் அமர்ந்துக் கொண்டு போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வந்தனர். பின்னர் ஆசிரமத்தின் மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த கலவரத்தில் 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 6 பேர் இறந்தனர்.
இதனிடையே, 4 ஆண்டுகளாக நடந்து வந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்குகளில் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் குற்றவாளிகள் என்று ஹரியாணாவின் ஹிசார் மாவட்ட நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது.  இதையடுத்து, சாமியார் ராம்பாலுக்கு  ஆயுள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்