SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் மாடல் அழகியை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசிச்சென்ற இளைஞர் கைது

2018-10-16@ 13:02:18

மும்பை:  மும்பையில் மாடல் ஒருவரை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து ரோட்டில் வீசிச்சென்ற  மாணவனை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்ஷித். 20 வயதாகும் இவர், மாடல் ஆகும் ஆசையில் மும்பை வந்துள்ளார்.  இவருக்கும் மும்பையில் பி.காம் படித்துக்கொண்டிருக்கும் சையத் என்பவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அந்தேரி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு மான்சியை சையத் அழைத்துள்ளார் .  பின்னர் அங்கு சென்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் ஒருகட்டத்தில் விரக்தியடைந்த சையத் அருகிலிருந்த இரும்பு கம்பியால் மான்சியை தாக்கியுள்ளார் . இதில் மயங்கி விழுந்த மான்சியின் கழுத்தை கயிறால் இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் மான்சியின் உடலை சூட்கேஸில் அடைத்துள்ளார். பிறகு டாக்சி ஒன்றை சையத் புக் செய்துள்ளார். டாக்சியின் டிக்கியில் அந்த சூட்கேஸை வைத்து அடைத்துவிட்டு விமான நிலையம் செல்ல வேண்டும் என்று சொல்லி சையத் புறப்பட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும் வேறு வழியில் செல்லுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார் சையத்.

கார் மலாடு அருகே சென்றபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்த சொன்ன சையத், சூட்கேஸுடன் இறங்கிவிட்டு டாக்சி டிரைவரை அனுப்பிவிட்டார். பிறகு அந்த பகுதியின் ஓரத்தில் சூட்கேஸை வீசிவிட்டு யாருக்கும் தெரியாதது போல ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார்.  அடுத்த சில நிமிடங்களிலேயே டாக்சி டிரைவர் அந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது சையத் கொண்டு வந்த சூட்கேஸ் ஓரத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். பின்னர்  அங்கு விரைந்த காவல்துறையினர்  சூட்கேஸை திறந்து பார்த்தபோது உள்ளே இளம் பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விரைந்து செயல்பட்ட போலீசார், சையத் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்று அவரை கைது செய்தனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்