SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் காமராஜ் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு தொடர்கிறது

2018-10-16@ 09:33:36

திருவாரூர்: தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உறவினரான மனோகரன் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. மன்னார்குடியில் உள்ள டி.எம்.ஏ. இன்ப்ராஸ்டர்சர் அலுவலகத்தில் 48 பேர் கொண்ட  வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மனோகரன் இல்லம் மற்றும் அலுவலகம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மனோகரன் 10 ஆண்டுகளாக அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர் சாலை அமைக்கும் பணி,  மேம்பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்ததாரர். திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரயில்வே வழித்தட பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில்  இவருக்குச் சொந்தமான தஞ்சை திருக்கருக்காவூர் திருமண மண்டபம், மன்னார்குடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க், , லாட்ஜ், நீடாமங்கலம் அருகேயுள்ள கூவனூரில் உள்ள கல்குவாரி, வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலைமுதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்றும் மனோகரனுக்கு சொந்தமான டி.எம்.ஏ. இன்ப்ராஸ்டர்சர் அலுவலகத்தில் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்