SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல் அம்பலம்

2018-10-16@ 08:18:51

புதுவை : புதுவை : தமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல் அம்பலமாதி உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலக வங்கி டெண்டரை போலி ஆவணம் தாக்கல் செய்து அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் எடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த ஓம்சக்தி நிறுவனத்திற்கு 15 மாதம் தடை விதித்து உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உலக வங்கி நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை நிறுவனம் இனி ஏழாம் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

கட்டுமான நிறுவன அதிபர் யார் ?

உலக வங்கி குறிப்பிட்டுள்ள தகவல்படி ஓம்சக்தி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் புதுவையில் உள்ளது. ஓம்சக்தி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவன முகவரியில் இருப்பவர் விழுப்புரத்தை சேர்ந்த ஜீவரத்தினம். இவர் அதிமுக ஒப்பந்ததாரர் ஒருவரின் மைத்துனர் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சாலைப்பணி மேற்கொள்பவர்தான் ஜீவரத்தினர் உறவினரான அதிமுக ஒப்பந்ததாரர்

முன்னதாக தமிழகத்தில் 5 நெடுஞ்சாலைகளுக்கு 4,800 கோடிக்கான ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு தந்து ஊழல் செய்ததாக முதல்வர் எடப்பாடி மீது திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தான் நெடுஞ்சாலை முறைகேடு குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது முதல்வர் வசம் உள்ள அதே நெடுஞ்சாலைத்துறையில் மீண்டும் மற்றொரு முறைகேடு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்