SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா?

2018-10-14@ 12:12:42

டெல்லி: பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளராக இருந்து தற்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தீவிரம் அடைந்து வருகின்றன. கடந்த வாரம் இந்த விவகாரம் வெடித்த போது, அரசுமுறை பயணமாக அக்பர் நைஜீரியாவில் இருந்தார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “ என் மீதான புகார்கள் தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியிடுவேன்” என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு கீழே பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது அக்பர் மீதான குற்றச்சாட்டாகும். இந்நிலையில்  மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்  தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் பிரதமர் மோடிக்கு தனது அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்