SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக இன்று தூத்துக்குடி இன்ஸ்பெக்டர்களிடம் சிபிஐ விசாரணை

2018-10-14@ 09:13:27

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது பணியில் இருந்து போலீசாரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் ஸ்டெர்லைட் இழுத்து மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

இதில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அனைவரையும் விசாரித்து வருகிறது. ஏற்கனவே  ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது பணியில் இருந்து போலீசாரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. அப்போது பணியில் இருந்த மற்ற போலீசாரிடமும் விசாரிக்க உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்