SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ தற்கொலை முயற்சி

2018-10-14@ 06:41:44

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. அவர் பணியில் இருக்கும் போது மது குடித்து   பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.  பொதுமக்கள் புகாரின் பேரில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக மூர்த்திக்கு தெரியவந்துள்ளது. மேல் நடவடிக்கைக்கு பயந்த அவர், நேற்று பணியில் இருக்கும் போது காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்திலேயே பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை முயன்றுள்ளார்.

அவர் வாந்தி எடுத்ததை பார்த்த சக போலீஸ்காரர்கள் மூர்த்தியை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்