SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடிக்கு பதில் 120 கோடி வருவாய் தான் 2.75 லட்சம் ஏக்கர் நிலங்களில் குத்தகை பாக்கி

2018-10-14@ 02:26:48

சென்னை: அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக உள்ள 2.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் குத்தகை பாக்கி வசூலாகவில்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது.  அறநிலையத்துறை கட்டுபாட்டில் 38,645 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் முக்கியமானவை. இக்கோயில்களுக்கு சொந்தமாக 22,600 கட்டிடங்களும், 33,665 மனைகளும் உள்ளது. மேலும். 4.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில்களின் சொத்தை பயன்படுத்தி வருபவர்கள் பல ஆண்டுகளாக பாக்கி வைத்துள்ளனர். சிலர் கோயில் சொத்தை உள் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர். இதில், 2.75 ஏக்கர் நிலங்களில் பல வருடங்களாக குத்தகை பணம் வரவில்லை. மேலும், கட்டிடங்கள், மனைகளிலும் வாடகை இருப்பவர்கள் பல மாதங்களாக பாக்கி வைத்திருப்பதாக தெரிகிறது.

இதனால், அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி வருவாயில் 120 கோடி கூட வருவாய் கிடைப்பதில்லை. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில் நிலங்ள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், கோயில் வருவாயை பெருக்கும் வகையிலும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள நிலங்களை மீட்பது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோயில் வருமானத்தை பெருக்கும் வகையில், பாக்கி வாடகை தொகையை வசூலிக்கவும், மேலும், கோயில் கட்டிடங்கள், நிலங்களுக்கு நியாயமான வாடகை மற்றும் குத்தகை உடனடியாக நிர்ணயம் செய்யவும். வாடகை பாக்கி தராதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்