SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி கொலுவை அலங்கரிக்க மதுரையில் தயாராகும் பொம்மைகள்

2018-10-14@ 02:18:58

மதுரை: நவராத்திரி திருவிழா அக். 10ல் துவங்குகிறது. பொதுவாக, நவராத்திரி என்றால் கோயில்கள், வீடுகளில் ெகாலு படிகளை வைத்து,  பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவது வழக்கம். இது ஒருபுறம் இருந்தாலும், வீட்டில் ஷோகேஸ் வைத்து, அதில் மண் பொம்மைகளை வைத்து பாரம்பரியத்தை காப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. மதுரை அருகே 6 கிமீ தொலைவில் உள்ள விளாச்சேரியிலும் தற்போது மண் பொம்மைகளை அதிகம் செய்ய துவங்கி விட்டனர்.
விளாச்சேரி களிமண், வண்டல் மண் நிறைந்த நிலப்பகுதி. சுமார் 300க்கும் மேற்பட்ட குலாளர் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் மண் பானை, பொம்மைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த பொம்மைகளை வெளிநாடு செல்பவர்களும் விரும்பி வாங்கி செல்கின்றனராம்...
இத்தொழிலை 4வது தலைமுறையாக செய்து வரும் அழகர்சாமியிடம் பேசியபோது...
எனது முப்பாட்டன் காலத்தில் அய்யனார், கருப்பணசாமிக்கு குதிரைகள், கிராம தேவதைகளை செய்து வந்தனர். தலைமுறைகளை தொடர்ந்து தற்போது நான் இந்த தொழிலை 20 ஆண்டாக செய்து வருகிறேன். நமது பாரம்பரியமிக்க இத்தொழிலை வெளிநாடு வரை கொண்டு சென்றுள்ளேன். விளாச்சேரி கிராமத்தில் கிடைக்கும் களிமண், வண்டல் மண்ணோடு, ஆற்று மணலையும் சேர்த்து இந்த பொம்மைகளை உருவாக்குகிறோம்.
மூலப்பொருளை சல்லடையில் சலித்து செங்கல் போல் சுடவைத்து தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து பின்பு அச்சில் ஊற்றவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் அதனை எடுத்து காய வைத்த பின் வண்ணங்களை பூசி அழகுப்படுத்த வேண்டும். பொம்மைகளுக்கான அச்சுகளை நானே தயாரித்து வைத்துள்ளேன். ஒரு பொம்மை அச்சு தயாரிக்க ₹7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை செலவாகும். தமிழர் பண்பாடு, கலாச்சாரம், புராண கதாப்பாத்திரங்களையும் சிலையாக உருவாக்கி வெளிநாடு வரை ஏற்றுமதி செய்கிறோம்.
பொம்மைகளை உருவாக்குவது ஒரு தனிக்கலை. முறையான பயிற்சியின்றி அதை செய்ய முடியாது. ஆண் சிலைகளுக்கு முகம் நீண்டும், பெண் சிலைகளுக்கு முகத்தில் கண்களுக்கு மேல் விரிவாகவும், விரல்கள் நீண்டும் அமைத்து உருவாக்க வேண்டும். ஆறுமாத குழந்தை சிலை முதல் ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ப முக அளவுகள் மாறுபடும். குழந்தை, தெய்வச்சிலைகள் செய்வதற்கு வெவ்வேறு அளவுகள் உள்ளன. தலை, முகத்திற்கு ஏற்ப கை, கால்களை எண் சாஸ்திரங்களை கற்றுக்கொண்டு வடிவமைக்க வேண்டும். தமிழகத்தில் மானாமதுரை, தஞ்சாவூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மண் பொம்மைகள் செய்தாலும், மதுரை விளாச்சேரி பொம்மைகளை அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர். மாடர்ன் ஆர்ட், போட்டோ எடுத்து அனுப்பினால் கூட, பொம்மையாக ரெடி செய்து தருகிறோம்.
போதிய வருமானம் கிடைத்தபோதும், இத்தொழிலுக்கு வங்கிகள் கடன் வழங்குவது இல்லை. இதனால் இத்தொழிலை செய்வோர் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து விட்டது. தமிழக அரசு இக்கலையை ஊக்குவிக்க வேண்டும். இந்த கலையை வரும் தலைமுறைகளும் கற்று சிறப்பிக்க வேண்டும்...! என்று முடித்தார் அழகர்சாமி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ChennaiMarinaMaasiMagam

  மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

 • AlbinoTurtleheart

  உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்