SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் முடிவை அறிவிக்காவிட்டால் போராட்டம்

2018-10-14@ 02:18:15

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை மாவட்ட தலைவர் சிவா.பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்ட தலைவர் எஸ்.நடராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் வி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானம் குறித்து அகில இந்திய தலைவர் கே.கணேசன், மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் கூறியதாவது: தமிழக அரசின் அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக 7வது ஊதியக்குழு ஒரு நபர் கமிஷனிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கைகள் வைத்திருக்கிறோம். இந்த பிரச்னையில் தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்காவிட்டால் நவம்பர் 10ம் தேதி நடைபெறும் மாநில அவசர செயற்குழு கூட்டத்தில் தொடர் வேலைநிறுத்தம், போராட்டங்கள் அறிவிக்கப்படும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்